Social Icons

Sunday, November 23, 2014

சாம்பல் மரத்தால் உருவாக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனம்

தொகுப்பு: MJM Razan
முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பைக்கை ஜெர்மன் வடிவமைப்பாளரான Matthias Broda என்ற கண்டுபிடிப்பாளர் தற்போது உற்பத்தி செய்துள்ளார். இது பெடலிங் மூலம் பைக்கில் உள்ள எலக்ட்ரீக் மோட்டரை ரிச்சார்ஜ் செய்து பயணிகள் பைக்கை இயக்கலாம். பிரிட்டனில் உள்ள தொழிலாளர்கள் 3,000 பவுண்டுகள் விலை கொண்டு இந்த பைக்கை வாங்கி உபயோகிக்கின்றனர். பெடலிங் செய்வதன் மூலமாக நாம் எந்த நேரத்திலும், விரைவில் மின்சாரம் உருவாக்கி பைக்கை இயக்க முடியும்.


பாரம்பரியமான உலோக அல்லது கார்பன் குழாய்களுக்கு மாறாக இந்த எலக்ட்ரானிக் பைக்(ebike) ஃபிரேம்(frame) முற்றிலும் சாம்பல் மரத்தால் செய்யப்பட்டது. மேலும் சக்கரங்கள், மோட்டார் மற்றும் மின்கம்பிகள் மட்டும் அதற்கு விதிவிலக்காகும். சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் Eberswalde பல்கலைக்கழக டெவலப்மென்ட் குழு மாணவர்கள், பெர்லினில் இந்த பைக்கை சோதனை செய்து பார்த்து வருகின்றனர்.

இந்த பைக் ஸ்டைலாக இருக்கும் என்றாலும், மரத்தால் செய்யப்பட்ட அதன் இருக்கை மிகச் சிறியதாக உள்ளதால் நீண்ட பயணத்துக்கோ அல்லது பள்ளம் - மேடான சாலைகளில் செல்வதற்கு கஷ்டமாக இருக்கும். இந்த பைக்கை மழைக் காலத்தில் எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தகவல் வழங்கவில்லை. பாரம்பரியமான உலோக பைக்குகளை குறைத்து ஒரு புதிய எலக்ட்ரானிக் பைக்கை உருவாக்க வேண்டும் என்று வடிவமைப்பாளர்கள் எண்ணினர், ஆதலால் இந்த சாம்பல் மரத்தால் ஆன மின்சார இருச்சக்கர வாகனத்தை உருவாக்கினர்.

Motorised ebikes ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில் இந்த பைக் அதிகமாக பிரபலமாகியுள்ளது. கடந்த ஆண்டில் வழக்கமான பைக் விற்பனை 5.5% கீழே சரிந்துள்ளபோது, விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பைக் விற்பனைகள் 8% அதிகரித்துள்ளது. ஜேர்மன் தபால் சேவையான, Deutsche Post என்ற இடத்தின் சுற்று வட்டாரங்களில் இந்த பைக்கை 6,200 பேர் பயன்படுத்துகின்றனர். வழக்கமான பைக்குகளில் உள்ள பெடலை மிதிப்பதால் உண்டாகும் வேர்வையை விரும்பாதவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கு மத்தியில் இந்த பைக் மிகவும் பிரபலமாகியுள்ளது.

No comments:

Post a Comment

 
Blogger Tricks
 
Blogger tips