தொகுப்பு: MJM Razan
செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு இம்மாத துவக்கத்தில் கியர் எஸ்
ஸ்மார்ட்வாட்ச் முன்பதிவை துவங்கியது சாம்சங் நிறுவனம். முதலில் 28,900
ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு இந்தியாவில் அமேசான் தளத்தில் ரூ. 27,900
க்கு கிடைக்கின்றது.
நிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனம் என்பதோடு இதன் மூலம் அழைப்புகளை
மேற்கொள்ள முடியும், இதற்கென தனியாக சிம் கார்டு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஜி மற்றும் 3ஜி வசதிகளும் உள்ளது. அடுத்து
இதன் சிறப்பம்சங்களை பாருங்கள்.
சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச் 2 இன்ச் (360*480 பிக்சல்) சூப்பர்
ஏஎம்ஏஎல்ஈடி வளைந்த டிஸ்ப்ளே, 1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும்
512 எம்பி ராம் கொண்டு டைசன் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. 4 ஜிபி
இன்டெர்னல் மெமரியும் இதில் உள்ளது.
சிம் கார்டு ஸ்லாட் இருப்பதால் இந்த கருவி 2ஜி, 3ஜி மற்றும் ப்ளூடூத் மூலம்
அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதோடு ஐபி67 சான்றிதழ் இருப்பதால் இதில்
தூசு மற்றும் நீர் புகாமல் இருக்கும்.
வைபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 4.1, ஏ-ஜிபிஎஸ்/ க்ளோனஸ், எஸ் ஹெல்த்
மற்றும் இதய துடிப்பு சென்சாரும் உள்ளது. மற்ற ஹார்டுவேரை பொருத்தவரை
அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், காம்பாஸ், ஏம்பியன்ட் லைட், யுவி
பாரோமீட்டர் கொண்டிருப்பதோடு 300எம்ஏஎஹ் லி-அயன் பேட்டரி கொண்டு
இயங்குகிறது.
No comments:
Post a Comment