
கார்களில் பயன்படுத்தக்கூடிய CarPlay எனும் சாதனத்தை
அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜெனீவாவில் இடம்பெற்ற மோட்டார் வாகனக்
கண்காட்சியில் அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுடன்,
குறுந்தகவல்களை அனுப்புதல், மேப் சேவையினைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு
வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இத்தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவதற்காக பிரபல்யமான Land
Rover, BMW, Jaguar, Hyundai, Ford, GM, Peugeot Citroen, Honda போன்ற கார்
உற்பத்தி நிறுவனங்களுடன் அப்பிள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
No comments:
Post a Comment