
இன்று பெர்சனல்
கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்புகள் இணையத் தேடலுக்கும், மின்னஞ்சல்
பார்ப்பதற்கு மட்டுமே பயன்படும்; அவற்றில் ஆபீஸ் தொகுப்பில் நாம்
மேற்கொள்ளும் செயல்பாடுகளை எளிதில் இயக்க முடியாது என்ற நிலை தற்போது
அடியோடு மாறிவிட்டது.
வழக்கமாக, நாம் ஒரு பெர்சனல்
கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளும் அனைத்தையும் டேப்ளட் பிசிக்களிலும்
மேற்கொள்லலாம் என்ற அளவிற்கு பல்முனைத் திறனுடன், டேப்ளட் பிசிக்களும்
அவற்றிற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களும் தற்போது கிடைக்கின்றன.
எனவே, பலர் தங்களின் லேப்டாப்
கம்ப்யூட்டர் இயங்கிய இடத்தில், டேப்ளட் பிசிக்களை வாங்கி இயக்க முடிவு
செய்கின்றனர். இவர்கள் இந்த முடிவெடுத்து, டேப்ளட் பிசிக்களை வாங்கும்
முன், தங்களின் தேவைகளையும், அதற்கான சரியான டேப்ளட் பிசிக்களையும்
சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் பல அம்சங்களைக் கவனித்து
முடிவெடுக்க வேண்டியதுள்ளது. இல்லை எனில், வழக்கமான ஆபீஸ் அப்ளிகேஷன்
செயல்பாடுகளை மேற்கொள்வது சிரமமாகிவிடும்.
டேப்ளட் பிசிக்களுக்கான ஆபீஸ் தொகுப்புகளை
வழங்குவதில் மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கிடையே
பலத்த போட்டி நிலவுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 8 மற்றும்
விண்டோஸ் போன் 8 ஆகியவற்றிற்கான ஆபீஸ் தொகுப்பினைத் தான் வடிவமைக்கப்
போவதில்லை என கூகுள் அறிவித்துவிட்டது.
விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் செயல்படும்
கூகுள் நிறுவனத்தின் ஆபீஸ் அப்ளிகேஷனே போதும் என கூகுள் எண்ணுகிறது.
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் டெஸ்க் டாப் செயல்பாட்டில், தன் ஆபீஸ் தொகுப்பு
இயங்குவதே போதுமானது என கூகுள் திட்டமிடுகிறது. இதே நேரத்தில், ஆப்பிள்
சாதன வாடிக்கையாளர்களுக்கு தன் ஆபீஸ் தொகுப்பினை வழங்க மைக்ரோசாப்ட் பெரும்
முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதனை ஆப்பிள் ஸ்டோர் வழி விற்பனை செய்திட
திட்டமிடுகிறது. இதற்கான முடிவுகளை எடுக்க மைக்ரோசாப்ட், ஆப்பிள்
நிறுவனத்துடன் முயற்சிக்கிறது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்கும் ஆபீஸ்
தொகுப்பு இலவசமாக தரப்படும். ஆனால், அதனைச் செயல்படுத்த முயற்சிக்கையில்,
ஆபீஸ் 365 தொகுப்பிற்குக் கட்டணம் செலுத்திப் பெற வேண்டும். ஆப்பிள்
நிறுவனம் இதற்கு 30% கட்டணத்தைக் கேட்கிறது.
கூகுள் ஆண்ட்ராய்ட் இயக்க சாதனங்கள்
மற்றும் குரோம் புக் கம்ப்யூட்டர்களில் தன் ஆபீஸ் தொகுப்பு இயங்கி பிரபலமாக
வேண்டும் என முயற்சிக்கிறது. அதே போல மைக்ரோசாப்ட் தன் ஆபீஸ் தொகுப்பினை,
மொபைல் சாதனங்களில், முன்னுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறது.
ஆனால், மொபைல் சாதனங்களைப் பொறுத்த வரை,
ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இயக்கங்களே பெரும் அளவில்
பயன்படுத்தப்படுவதால், அந்த சிஸ்டங்களில் இயங்கும் ஆபீஸ் தொகுப்புகளையும்
வடிவமைத்து வழங்கி, இந்த மொபைல் ஆபீஸ் சந்தையில் நல்ல இடம் பிடிக்க
திட்டமிடுகிறது.
எனவே, தங்கள் டேப்ளட் பிசிக்களில், ஆபீஸ்
தொகுப்பினை இயக்கி தங்கள் பணியினை மேற்கொள்ள விரும்புபவர்கள், இந்த மூன்று
கோணங்களையும் தெளிவாக உணர்ந்த பின்னரே, தங்களுடைய டேப்ளட் பிசிக்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment