
உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.
நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, நெளிந்து செல்வதை கண்டு வியப்படைந்த அவர், தனது கைவலையை லாவகமாக வீசி அந்த அபூர்வ மீனை சிறைபிடித்தார்.
அதனை சோதனையிட்ட கடல் உயிரியல் ஆய்வக அதிகாரிகள் பிடிபட்ட இந்த அரியவகை
மீன், 'ஸல்பா மகியோர்’ என்ற இறால் வகை மீன் இனத்தை சேர்ந்தது என்றும், மிக
அபூர்வமாகவே இவை கடலின் மேற்பரப்பில் தென்படும் என்றும் கூறியுள்ளனர்.நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, நெளிந்து செல்வதை கண்டு வியப்படைந்த அவர், தனது கைவலையை லாவகமாக வீசி அந்த அபூர்வ மீனை சிறைபிடித்தார்.
'முழுக்க முழுக்க கண்ணாடி போன்ற வடிவில் உள்ள இந்த மீனின் உடல் வழியாக ஊடுருவி, எதிர்புறத்தில் உள்ள பொருட்களை துல்லியமாக பார்க்க முடிகிறது. முதுகெலும்பு இல்லாத இந்த மீனின் இரைப்பை பகுதியில் உள்ள ஆரஞ்சு நிற அழுக்கு மட்டும் 'பளிச்’ என்று வெளியே தெரிகிறது’ என்று இந்த மீனை பிடித்தவரின் மகன்களில் ஒருவனான ஃபின் என்ற சிறுவன் ஆச்சரியத்துடன் கூறுகிறான்.
No comments:
Post a Comment